ராணுவ பாதுகாப்போடு பாக்., மண்ணில் உலக லெவன் அணி

ராணுவ பாதுகாப்போடு பாக்., மண்ணில் உலக லெவன் அணி

ராணுவ பாதுகாப்போடு பாக்., மண்ணில் உலக லெவன் அணி
Published on

பலத்த ராணுவ பாதுகாப்போடு உலக லெவன் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் இன்று விளையாடுகிறது.

பாகிஸ்தானின் லாகூரில், 2009-ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் சென்ற பஸ் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் வீரர்கள் காயத்துடன் தப்பினர். இந்த சம்பவத்தை அடுத்து, முன்னணி கிரிக்கெட் அணிகள், பாகிஸ்தானின் கிரிக்கெட் விளையாட மறுத்து வருகின்றன. ஜிம்பாப்வே அணி மட்டுமே அங்கு விளையாடியது.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பையை பாகிஸ்தான் அணி வென்ற பிறகு அந்த நாட்டில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒத்துழைப்போடு, உலக லெவன் அணி உருவாக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. இந்த அணி, அங்கு 3 டி30 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் இன்று, செப்.13, செப்.15 ஆகிய தேதிகளில் லாகூரில் நடக்கிறது. இந்த போட்டிக்கு சர்வதேச அங்கீகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. 

தென்னாப்பிரிக்காவின் பாப் டு பிளிசிஸ் உலக லெவன் அணிக்கு கேப்டன். இந்த அணி நேற்று லாகூர் சென்றடைந்தது. விமான நிலையத்தில் இருந்து குண்டு துளைக்காத பேரூந்தில் வீரர்கள் பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 6 அடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் வீரர்கள் தங்கியுள்ள ஓட்டல் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. அது மட்டுமின்றி போட்டிக்கும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போட்டி, லாகூர் கடாபி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கிறது. 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com