விராட் கோலியை விமர்சித்த நிருபரின் வாயை அடைத்த பாகிஸ்தான் வீரர்!

விராட் கோலியை விமர்சித்த நிருபரின் வாயை அடைத்த பாகிஸ்தான் வீரர்!
விராட் கோலியை விமர்சித்த நிருபரின் வாயை அடைத்த பாகிஸ்தான் வீரர்!

எப்போதுமே அழுத்தமில்லாத போட்டிகளில், சுமாரான எதிரணிகளுக்கு எதிராக மட்டுமே விராட் கோலி சிறப்பாக செயல்படுவார் என்று விமர்சித்திருக்கிறார் பாகிஸ்தான் ஊடகவியலாளர் ஃபரித் கான்.

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ரன்களைக் குவிக்க முடியாமல் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளான இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, சமீப காலமாக தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். புதிய ஆண்டில் இதுவரை விளையாடிய நான்கு ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதங்கள் விளாசி விமர்சகர்களின் வாயை அடைத்து உள்ளார்.

இருப்பினும் ஒவ்வாமையால் சிலர் செய்யும் உள்நோக்கம் கொண்ட விமர்சனங்கள் ஆங்காங்கே எழுந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வரிசையில் இணைந்த பிரபல பாகிஸ்தான் பத்திரிக்கை ஊடகவியலாளர் ஃபரித் கான், எப்போதுமே அழுத்தமில்லாத போட்டிகளில், சுமாரான எதிரணிகளுக்கு எதிராக, பேட்டிங்க்கு சாதகமான ஆடுகளங்களில் மட்டுமே விராட் கோலி சிறப்பாக செயல்படுவார் என்று ட்விட்டரில் விமர்சனத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது கருத்துக்கு இந்திய ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்து வரும் அதே வேளையில், ஃபரித் கானின் கருத்தால் அதிருப்தியடைந்த பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் சோஹைப் மசூத், இப்படியே வன்மத்தை காட்டிக்கொண்டு எத்தனை நாட்கள் மாறாமல் இருப்பீர்கள் என்று பேசியிருக்கிறார்.

மேலும் அவர், ''விராட் கோலி அழுத்தம் இல்லாத போது தான் சிறப்பாக செயல்படுவார் என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா? மாறுங்கள் நண்பரே. இதற்கு முன் விராட் கோலி  சதமடிக்காத நாடு அல்லது ஆடுகளங்கள் இருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம். விராட் கோலியை போல இந்திய ரசிகர்கள் பாபர் அசாமை கிண்டலடித்தாலும் அவர் எவ்வளவு பெரிய வீரர் என்பதை நாம் அறிவோம். எனவே இதை தவிர்த்து விடுங்கள்” என்று கூறினார் சோஹைப் மசூத்.  

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com