இஸ்லாத்துக்கு எதிராக செயல்படுவதா? முகமது ஷமியை திட்டிய ரசிகர்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் திட்டியதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தனது மகள் ஆயிராவின் இரண்டாவது பிறந்த நாளை, கடந்த 18-ம் தேதி குடும்பத்தினருடன் கொண்டாடினார் முகமது ஷமி. கேக் வெட்டும் இந்தப் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அவர் வெளியிட்டிருந்தார். புகைப்படத்தில் ஷமியின் மனைவி ஹசின் ஜஹான், புர்கா அணியாமல் இருக்கிறார். இதையடுத்து சிலர் அவரை கடுமையாகத் தாக்கி கமென்ட் போட்டனர்.
’பிறந்தநாள் கொண்டாடுவது இஸ்லாத்துக்கு எதிரானது. அதுவும் இல்லாமல் ஹசின் ஜஹான் புர்கா அணியாமல் இருப்பது பாவம். உங்கள் மனைவியை இப்படிப் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது’ என்று கருத்து தெரிவித்திருந்தனர். #GoToHell என்ற ஹாஷ்டேக்கைப் பயன்படுத்தி சிலர் கடுமையாகத் திட்டியிருந்தனர். இதையடுத்து ஷமிக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் களத்தில் இறங்கி கருத்து தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

