\
ஓய்வில்லாமல் போட்டி: கோலிக்கு ரெஸ்ட்?

ஓய்வில்லாமல் போட்டி: கோலிக்கு ரெஸ்ட்?

ஓய்வில்லாமல் போட்டி: கோலிக்கு ரெஸ்ட்?
Published on

இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடரில் இருந்து கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு புதிய அணித்தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கடந்த 12 மாதத்தில் இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் உட்பட இந்திய கிரிக்கெட் அணி, 43 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் ஓய்வில்லாமல் விளையாடி வரும் வீராத் கோலிக்கு ஓய்வளிக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதையடுத்து இலங்கைக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு புதிய கேப்டன் நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலிக்கு பதில் ரோகித் சர்மா கேப்டன் ஆக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. சிறிது கால ஓய்வுக்குப் பின் மீண்டும் விராட் கோலி கேப்டனாக பதவியேற்பார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com