55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி - மழையால் மாறிய ஆட்டம்

55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி - மழையால் மாறிய ஆட்டம்

55 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி - மழையால் மாறிய ஆட்டம்
Published on

ஆப்கானிஸ்தானிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வலுவான நிலையில் இருந்த இந்திய அணி 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது. 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. தொடக்க வீரர்களாக முரளி விஜய், ஷிகர் தவான் இருவரும் சதம் அடித்தனர். முரளி விஜய் 105(153), தவான் 107 (96) ரன்களிலும் ஆட்டமிழந்தனர். முரளி விஜய் ஆட்டமிழக்கும் போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால், அவரை தொடர்ந்து அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தன. அடுத்த 55 ரன்களுக்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

கே.எல்.ராகுல் 54, புஜாரா 35, ரகானே 10, தினேஷ் கார்த்திக் 4 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணி முதல் நாள் முடிவில் 78 ஓவர்கள் விளையாடி 6 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் எடுத்துள்ளது. ஆப்கான் தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் யமீன் 2 விக்கெட்டுகள் சாய்த்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரஷித் கான் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். 26 ஓவர்கள் வீசிய அவர் 120 ரன்களும் வாரி வழங்கினார். இவரது ஓவரை தொடக்கத்தில் தவான் வெளுத்து வாங்கினார். 

உணவு இடைவெளி வரை ஆட்டம் இந்திய அணியின் கையில் தான் இருந்தது. 27 ஓவர்களில் இந்திய அணி 158 ரன்கள் குவித்து இருந்தது. ரன் ரேட் 2.85 ஆகும். பின்னர் தேநீர் இடைவெளியின் போதும் இந்திய அணி 41 ஓவர்களில் 223 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்தது. ஆனால், 45.1 ஓவரில் இந்திய அணி 248 ரன்கள் குவித்திருந்த போது மழை குறுக்கிட்டது. மழைக்கு பின்னர் ஆட்டத்தில் மந்தம் ஏற்பட்டது. பந்து வீச்சாளர்களின் கை ஓங்கியது. பின்னர் ஆட்டம் முடிவும் வரை பந்து வீச்சாளர்களின் ஆதிக்கம் இருந்தது. முதல் நாளில் 400 ரன்களை இந்திய அணி எட்டும் என்று எதிர்பார்த்த நிலையில் 347 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com