'நான் இருந்ததிலேயே சிறந்த அணி இதுதான்' - தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி

'நான் இருந்ததிலேயே சிறந்த அணி இதுதான்' - தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி
'நான் இருந்ததிலேயே சிறந்த அணி இதுதான்' - தினேஷ் கார்த்திக் நெகிழ்ச்சி

அணியின் கேப்டனும் பயிற்சியாளரும் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள் எனக் கூறியுள்ளார்  தினேஷ் கார்த்திக்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிரடி ஆட்டத்தால் ஃபினிஷர் அவதாரம் எடுத்தார் தினேஷ் கார்த்திக். இதனால், இந்திய அணிக்கான வாய்ப்பு தேடி வந்தது. 36 வயதான தினேஷ் கார்த்திக் இந்திய அணிக்கு கிட்டதட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பினார். இந்த ஆண்டில் மட்டும் 174 ரன்களை குவித்து ஃபினிஷர் இடத்தை தன்வசமாக்கிக் கொண்டார். அடுத்தடுத்த தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டு வருவதால், இம்மாதம் துவங்கும் ஆசியக் கோப்பை, அக்டோபர் இறுதியில் ஆஸ்திரேலியாவில் துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடரிலும் தினேஷ் கார்த்திக்கு இடம் உறுதி எனக் கூறப்படுகிறது.  

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய தினேஷ் கார்த்திக், ''இந்த நேரத்தில் அழுத்தம் என்பது ஒரு பாக்கியம். ஒரு கிரிக்கெட் வீரராக, ஒரு விளையாட்டு வீரராக, நீங்கள் மிக உயர்ந்த மட்டத்தில் விளையாடும்போது மட்டுமே வழங்கப்படும் ஒரு விஷயம் இது. மக்கள் உங்களிடமிருந்து சில விஷயங்களை எதிர்பார்க்கிறார்கள், அதனால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட நாளில் போட்டி நிலவரம் என்ன என்பதை உறுதி செய்வதும், போட்டியின் சூழ்நிலையைப் படித்து, அந்த நாளில் உங்களால் முடிந்ததைச் செய்ய முயற்சிப்பதும் முக்கியம்.

எனது உழைப்புக்கு கிடைத்த வெகுமதி பவர்-ஹிட்டிங் . எனது முழு கிரிக்கெட் வாழ்க்கையிலும் இதையே நான் இலக்காகக் கொண்டுள்ளேன். அணியின் கேப்டனும் பயிற்சியாளரும் என் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார்கள். எனவே அணிக்கு கைக்கொடுக்கும் வகையில் எனது செயல்திறனை காண்பிக்க வேண்டும். இதுவே நான் இந்திய அணியின் ஒரு அங்கமாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.

நான் இருந்த சிறந்த அணி சூழல்களில் இதுவும் ஒன்று என்று நினைக்கிறேன். வீரர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தை மட்டும் அடிப்படையாக வைத்து தீர்மானிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு ஒரு நேரம் கொடுக்கப்படுகிறது. தோல்வியடையவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. வீரர்களுக்கு தோல்வியடையும் வாய்ப்பை வழங்குவது மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன் "என்று கார்த்திக் கூறினார்.

இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பை: இந்திய அணிக்கு துணைக் கேப்டனாகும் சீனியர் வீரர்? - பிசிசிஐ திட்டம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com