“பாக்சிங் டே டெஸ்டின் தரமான சதங்களில் இதுவும் ஒன்று”-ரஹானேவை புகழ்ந்த ஷேன் வார்ன்!
பாக்சிங் டே டெஸ்டின் தரமான சதங்களில் இதுவும் ஒன்று என ரஹானேவை ஷேன் வார்ன் புகழ்ந்தார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரஹானே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் சதம் விளாசியுள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரஹானேவின் 12வது சதம் இது. இந்நிலையில் பாக்சிங் டே டெஸ்டின் சிறந்த சதங்களில் இதுவும் ஒன்று என ரஹானேவின் ஆட்டத்தை புகழ்ந்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்ன்.
“கிரிக்கெட் விளையாட்டில் பதிவு செய்யப்படும் நூற்றுக்கணக்கான சதங்களில் இதுவும் ஒன்று என கடந்து விட முடியாது. இது பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த சதங்களில் ஒன்று. ஆட்டத்தின் போக்கு, ஆடுகளத்தின் தன்மை, உலகத் தரமான பந்துவீச்சு என அனைத்துடனும் சண்டை செய்து பதிவு செய்துள்ள சதம் இது. இது ஏன் அப்படி ஒரு தரமான சதம் என என்னால் இதற்கு மேலும் சொல்ல முடியாது. ஆனால் இதை மட்டும் நான் சொல்லியே ஆகணும். இது தரமான பாக்சிங் டே சதம்.
இந்திய கேப்டன் ரஹானேவின் சிறந்த கிரிக்கெட் ஆட்டத்திற்கு ஒரு உதாரணம் இது. இந்தியாவில் உள்ள கோலி, தனது இருப்பு இல்லாமல் அணியின் ஆட்டத்தை பார்த்து அசந்து போயிருப்பார் என தெரிவித்துள்ளார் வார்ன்.