\
காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்..!

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்..!

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்..!
Published on

காமன்வெல்த் மகளிர் 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி கடந்த புதன்கிழமை தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்தத் தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, கென்யா, மலேசியா உள்ளிட்ட 71 நாடுகளைச் சேர்ந்த சுமார் 6,600 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் 69 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை பூனம் யாதவ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். காமன்வெல்த் போட்டியில் தற்போது வரை 7 பதக்கங்களை பெற்று, பதக்க பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. இதில் 5 தங்கப் பதக்கங்களும், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் அடங்கும். ஆஸ்திரேலியா மொத்தமாக 59 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com