\
இந்தியா - இலங்கை 2வது ஒருநாள் கிரிக்கெட் - தொடரை கைப்பற்றுமா இந்திய அணி

இந்தியா - இலங்கை 2வது ஒருநாள் கிரிக்கெட் - தொடரை கைப்பற்றுமா இந்திய அணி

இந்தியா - இலங்கை 2வது ஒருநாள் கிரிக்கெட் - தொடரை கைப்பற்றுமா இந்திய அணி
Published on

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இந்தியாவுடன் 20 ஓவர் மற்றும் ஒறுநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. அதன்படி 20 ஓவர் தொடரில் மோதிய இலங்கை அணி, 1-2 என்கிற புள்ளிகள் கணக்கில் இந்தியாவிடம் தோல்வியடைந்தது.

இதனையடுத்து, கவுகாத்தி பர்சபரா மைதானத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் 1- 0 என்கிற புள்ளி கணக்கில், இந்தியா வெற்றிபெற்று முன்னிலை வகித்து வருகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட இத்தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் ஆட்டத்தில் தோல்வியடைந்த இலங்கை அணி, தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா என இன்று நடைபெறும் ஆட்டத்தில் தெரிந்துவிடும்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com