"ஒரு காலத்தில் மழைதான் பிரச்னையா இருந்தது" சச்சினின் நெகிழ்ச்சிப் பதிவு !

"ஒரு காலத்தில் மழைதான் பிரச்னையா இருந்தது" சச்சினின் நெகிழ்ச்சிப் பதிவு !

"ஒரு காலத்தில் மழைதான் பிரச்னையா இருந்தது" சச்சினின் நெகிழ்ச்சிப் பதிவு !
Published on

ஒரு காலத்தில் நம் எல்லோருக்கும் மழைதான் பிரச்னையாக இருந்தது என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பழைய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர்.

24 ஆண்டுகாலம் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013 ஆம் ஆண்டு ஓய்வுப பெற்றார். சர்வதேச கிரிக்கெட்டில் 51 சதங்களையும் 68 அரை சதங்களையும் அடித்துள்ளார். கிரிக்கெட் உலகில் சச்சின் டெண்டுல்கர் செய்துள்ள பல சாதனைகளை இதுவரை யாரும் உடைக்கவில்லை. கொரோனா காரணமாக வீட்டில் முடங்கியுள்ள சச்சின் டெண்டுல்கர், சமூக வலைதளங்களில் அவ்வப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் மழையில் நனைந்தபடி உள்ள புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சச்சின். மேலும் அந்தப் புகைப்படத்தில் " ஒரு காலத்தில் மழைதான் அனைவரது பிரச்னையாகவும் இருந்தது" என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com