'ஆடுகளம் பேட்டிங்கிற்கு எளிதாக இல்லை' - அகமதாபாத் 'பிட்ச்' குறித்து ஷுப்மன் கில்

'ஆடுகளம் பேட்டிங்கிற்கு எளிதாக இல்லை' - அகமதாபாத் 'பிட்ச்' குறித்து ஷுப்மன் கில்
'ஆடுகளம் பேட்டிங்கிற்கு எளிதாக இல்லை' - அகமதாபாத் 'பிட்ச்' குறித்து ஷுப்மன் கில்

3 மாதங்களுக்கும் குறைவான இடைவெளியில்  ஷுப்மன் கில் டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 கிரிக்கெட் என மூன்று வடிவங்களிலும் 5 சதங்களை அடித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்தது. இப்போட்டியில் சீராக ரன்கள் சேர்த்த ஷுப்மன் கில் 194 பந்துகளில், ஒரு சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் சதம் விளாசினார். சர்வதேச அரங்கில் இது அவரது 2-வது சதமாக அமைந்தது. ஆஸ்திரேலிய அணிக்கு கடும் சவால் அளித்த ஷுப்மன் கில் 235 பந்துகளில், ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 128 ரன்கள் எடுத்த நிலையில் நேதன் லயன் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 2023-ம் ஆண்டு சுப்மன் கில் அடிக்கும் ஐந்தாவது சதம் இதுவாகும். முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு சதம் அடித்தார். நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு இரட்டை சதம் அடித்தார். அதே நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் தனது முதல் டி20 சதத்தையும் அடித்தார். தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சதம் அடித்திருக்கிறார்.

இந்நிலையில் போட்டி குறித்து சுப்மன் கில் கூறுகையில், ''நான் செட் ஆனவுடன், நான் தற்காப்பு மற்றும் எச்சரிக்கையுடன் இருப்பதாக எனக்கு ஒரு உணர்வு வந்தது. இப்போது நான் செட் ஆகிவிட்டேன், முடிந்தவரை நான் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். நான் என்னை மிகவும் நிதானப்படுத்திக் கொண்டேன்.

நான் செட் ஆனவுடன், பெரிய ஷாட்டை அடிக்க முயற்சிப்பேன். அதுவே எனது ஆட்டம். அதனால் என் இயல்பான விளையாட்டை விளையாடும் போது நான் ஆட்டமிழந்தால் பரவாயில்லை என்று எனக்கு நானே சொல்லிக் கொள்ள வேண்டியிருந்தது. நான் செட் ஆகிவிட்டதாக உணர்ந்தாலும் தற்காப்பு ஆட்டத்தை விளையாட முயற்சித்ததுதான் மூல காரணம். நான் செட் ஆன பிறகு பெரிய ஷாட் விளையாட முயற்சித்து வெளியேறினால், அந்த நீக்கத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் எனது பாணியில் இல்லாத ஒரு ஷாட்டை ஆடி நான் வெளியேறினால் அது ஏற்றுக்கொள்ள முடியாததாகிவிடும்.

எனவே, அடுத்த முறை இதுபோன்ற சூழ்நிலை ஏற்படும் போது என் மீது அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது. அதை நான் கொஞ்சம் சுதந்திரமாக வைத்திருக்க வேண்டும். ஆடுகளம் பேட்டிங்கிற்கு எளிதாக இல்லை. இது போன்ற விக்கெட்டுகளில், சரளமாக ரன்களை எடுப்பது கடினம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் இந்த விக்கெட்டுகளில் நீங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும்'' என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com