வைரலாகும் கோலியின் ஹை ஜம்ப்! கிரிக்கெட்டரா? ஜம்ப்பரா?
தென்னாப்ரிக்க தொடரின் போது விராட் கோலி தாவிய ஜம்ப்புகள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, தென்னாப்ரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக கடைசி டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்க்ஸ்களிலும், சிக்கலான நேரத்திலும் 54, 41 என ரன்களை குவித்தார். இதுவும் இந்திய வெற்றிக்கு ஒரு காரணம் என்றால் யாராலும் மறுக்க இயலாது.
இந்நிலையில் தென்னாப்ரிக்க தொடரின் போது கோலி மகிழ்ச்சியான தருணங்களை வெளிப்படுத்துவதற்காக, தாவி குதித்த
புகைப்படங்கள் கிரிக்கெட் பிரியர்கள் மத்தியில் வைரலாக மாறி, இணையதளத்தை சுற்றி வருகிறது.
இதில் 3வது டெஸ்டின் 2வது இன்னிங்க்ஸில், டி வில்லியர்ஸ் அவுட் ஆன உடன் மகிழ்ச்சியில் தாவிக்குதிக்கும் கோலி, பார்ப்பவர்கள் ஆச்சர்யப்படும் உயரத்திற்கு தாவியுள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்துள்ள பலரும், இவரை ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்பினால் இந்தியாவுக்கு உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் கிடைப்பது நிச்சயம் என கூறியுள்ளனர்.

