சச்சின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று..!

சச்சின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று..!

சச்சின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று..!
Published on

இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வந்த சச்சின் டெண்டுல்கரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள் இன்று. 

தனது 16-வது வயதில் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய சச்சின் டெண்டுகர் ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும் எடுத்தார். சச்சின் தனது கிரிக்கெட் பயணத்தில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் சேர்த்து மொத்தம் 100 சதங்களை அடித்து சாதனை படைத்தார். இதில் ஒருநாள் போட்டியில் 49 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களும் அடங்கும். 

100 சதங்களை அடித்த சச்சின் தனது முதல் சதம் அடிக்க 78 போட்டிகள் காத்திருக்க வேண்டி இருந்தது. 79-வது போட்டியில் தான் தனது முதல் சதத்தை அடித்தார். அந்த போட்டி 1994-ம் ஆண்டு செம்ப்டம்பர் மாதம் இதே நாளில்(செப்.9) அந்தப் போட்டி நடந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த போட்டியில் சச்சின் 130 பந்துகளில் 110 ரன்கள் எடுத்து இருந்தார். 

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், “காலங்கள் கடந்து சென்றாலும், நினைவுகள் மறக்காது. ஐ.சி.சி., ரசிகர்களுக்கு நன்றி” என்று குறிப்பிட்டு இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com