இந்திய அணி ஜெர்ஸிக்கு சச்சின் விடைகொடுத்த தினம் இன்று - நினைவுகளை பகிரும் ரசிகர்கள்!

இந்திய அணி ஜெர்ஸிக்கு சச்சின் விடைகொடுத்த தினம் இன்று - நினைவுகளை பகிரும் ரசிகர்கள்!
இந்திய அணி ஜெர்ஸிக்கு சச்சின் விடைகொடுத்த தினம் இன்று - நினைவுகளை பகிரும் ரசிகர்கள்!

ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என செல்லமாக அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்ற தினம் இன்றாகும்.

கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்து உலகின் தலைசிறந்த வீரராக விளங்கிய சச்சின் டெண்டுல்கர், கடந்த 2013ம் ஆண்டு இதே நாளில் (நவ.16) ஓய்வு பெற்றார். மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிராக மும்பை வான்ஹடே மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டித் தொடர் முடிந்தவுடன் தனது 24 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து விடை பெற்றார் சச்சின். 1989ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கிய சச்சின், 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒருநாள் போட்டிகள் ஒரு டி20 போட்டி மற்றும் 78 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் 18,426 ரன்கள், டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களை இவர் குவித்துள்ளார். ஒருநாள் போட்டியில் அதிக பட்ச ரன்களாக 200 ரன்களை எடுத்துள்ளார். இதுமட்டுமின்றி ஒருநாள் போட்டியில் 154 விக்கெட்டுகள் மற்றும் டெஸ்ட் போட்டியில் 46 விக்கெட்டுகளையும் சாய்த்துள்ளார்.

இந்தநாள் வரையிலும் கிரிக்கெட் உலகின் சாதனை மன்னன் என்ற பட்டத்தை தக்க வைத்துள்ளவர் சச்சின். இன்று சச்சினின் ஓய்வு தினம் என்பதால் அவரது புகைப்படங்கள் மற்றும் சாதனைகளை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com