காய்ச்சலில் கார்த்திக், காயத்தில் ரஸல்: தவிப்பில் கொல்கத்தா, தெறிப்பில் சிஎஸ்கே!

காய்ச்சலில் கார்த்திக், காயத்தில் ரஸல்: தவிப்பில் கொல்கத்தா, தெறிப்பில் சிஎஸ்கே!
காய்ச்சலில் கார்த்திக், காயத்தில் ரஸல்: தவிப்பில் கொல்கத்தா, தெறிப்பில் சிஎஸ்கே!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் இன்று களமிறங்கும் கொல்கத்தா அணியை, வீரர்களின் காயம் வாட்டி வருகிறது.

ஐபிஎல் தொடரில், ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 

கொல்கத்தா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரஸல், டெல்லிக்கு எதிரான போட்டியின் போது மணிகட்டில் காயம் அடைந்துள்ளார். அதனால் அவர் இன்றைய போட்டியில் ஆடுவது சந்தேகம். அதே போல, கேப்டன் தினேஷ் கார்த்திக் காய்ச்சலில் பாதிக்கப்பட்டுள்ளார். இருந்தாலும் அவர் பயிற்சியில் ஈடுபட்டார். தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் லின்னுக்கும் உடல் நிலை சரியில்லை. இதனால் அந்த அணி சிக்கலில் உள்ளது.

சென்னை அணி, பேட்டிங், பந்துவீச்சில் பலம் வாய்ந்ததாகவே இருக்கிறது. கொல்கத்தாவுக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அந்த அணியை சுருட்டி இருந்தது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஏழு போட்டிகளில் ஆடி ஆடி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றி பட்டியலில் முதலிடத் தில் இருக்கிறது. கொல்கத்தா அணி 8 புள்ளிகள் பெற்றிருக்கிறது.

முந்தைய லீக் போட்டியில் சென்னை அணி தனது கடைசி பந்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது. கடைசி ஓவரில் நோ–பால் கொடுக்க மறுக்கப்பட் டதால் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அந்த சர்ச்சையில் இருந்து விட்டுவிட்டு இன்றைய போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் தோனி செயல்படுவார்.

போட்டி நடைபெறும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானதாக இருக்கும். இதனால் ரன் மழை பொழிய வாய்ப்பிருக் கிறது. ஈடன் கார்டன் மைதானத்தில் இரண்டு அணிகளும் இதுவரை 8 முறை மோதியுள்ளன. இதில் தலா 4 வெற்றி பெற்று இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. கடையாக நடந்த மூன்று போட்டிகளில் கொல்கத்தா அணியே வெற்றி பெற்றிருக்கிறது.

போட்டி, இன்று மாலை 4 மணிக்குத் தொடங்குகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com