ரெபேக்கா செப்டேஜி
ரெபேக்கா செப்டேஜி File image

உகாண்டா | நாடு திரும்பிய ஒலிம்பிக் வீராங்கனையை எரித்துக் கொல்ல முயற்சித்த காதலன்!

பாரிஸ் 2024 ஒலிம்பிக்ஸ் மாரத்தானில் உகாண்டா சார்பில் பங்கேற்று நாடு திரும்பிய வீராங்கனையை, அவரது காதலன் பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
Published on

2024 ஆம் ஆண்டு பாரிஸ் ஒலிம்பிக்கில் தொலைதூர ஓட்டபந்தயத்தில் 44 ஆவது இடத்தைப் பிடித்த வீராங்கனை, கொன்யாவை சேர்ந்த ரெபேக்கா செப்டேஜி (வயது 33). இவரின் காதலர், டிக்சன் எண்டிமா என்ற நபர்.

சில நாட்களுக்கு முன்பாக, ரெபேக்கா செப்டேஜி, கவுண்டி என்ற பகுதியில் பல தடகளப்பயிற்சி மையங்களுக்கு அருகில் இருக்கும் வகையில் டிரான்ஸ் நஸோயாவில் நிலம் ஒன்றை வாங்கியுள்ளார். இதனால், ரெபேக்காவிற்கும் அவரது காதலருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ரெபேக்கா செப்டேஜி
பாராலிம்பிக்| தங்கம் வென்று பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமார் சாதனை! மிரள வைக்கும் வாழ்க்கைப் பயணம்!

அது அதிகரித்த நிலையில் கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி, டிக்சன் பெட்ரோல் வாங்கி ரெபேக்காவின் மீது ஊற்றி கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால், ரெபேக்காவிற்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும், காதலன் டிக்சனுக்கும் காயம் ஏற்படவே... இருவரும் தற்போது எல்டோரெட் நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், 75% தீக்காயங்கள் ரெக்காவிற்கு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

ரெபேக்கா செப்டேஜி
IAS அதிகாரி to பாராலிம்பிக்கில் 2 வெள்ளி.. முதல் இந்திய வீரராக சுஹாஸ் யதிராஜ் படைத்த சாதனை!

இதுப்போன்ற சம்பவங்கள் கென்யாவில் வீராங்கனைகளுக்கு நிகழ்வதென்பது, இது முதன்முறை அல்ல. ஆம் இதேபோன்றொரு சம்பவம், கடந்த 2022 ஆம் ஆண்டில் கென்யாவில் பிறந்த பஹ்ரைன் தடகள வீராங்கனையான டமரிஸ் முத்தி என்பவருக்கு நிகழ்ந்தது. அவர் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். போலவே 2023 ஆம் ஆண்டு உகாண்டா ஒலிம்பிக் ஓட்டப்பந்தய வீரரான பெஞ்சமிக் கிப்லாகாட் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சூழலில் இறந்து கிடந்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com