IND-க்காக பங்கேற்ற ஒரேஆள்.. நம்பிக்கையை உயர்த்தும் மல்யுத்த வீரர் அமன் ஷெராவத்! அரையிறுதிக்கு தகுதி!

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்வில் தனியொரு மல்யுத்த வீரராக பங்கேற்றுள்ள அமன் ஷெராவத் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளார்.
அமன் ஷெராவத்
அமன் ஷெராவத்x
Published on

2024 பாரிஸ் ஒலிம்பிக் தொடரானது ஜுலை 25ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 117 பேர் கொண்ட குழுவுடன் பயணித்துள்ள இந்தியா, பல்வேறு பிரிவுகளில் பதக்கத்திற்காக போராடிவருகிறது.

இதுவரை துப்பாக்கி சுடுதலில் 3 பதக்கங்களை இந்தியா வென்றுள்ள நிலையில், இன்று இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ராவும், வெண்கலத்திற்கான போட்டியில் இந்திய ஹாக்கி அணியும் விளையாடவிருக்கின்றன. இன்றைய நாளில் இந்தியாவின் பதக்கத்தின் எண்ணிக்கை உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அமன் ஷெராவத்
அமன் ஷெராவத்

இந்நிலையில் இந்தியாவிற்கு மேலும் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் அமன் ஷெராவத் அரையிறுதிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளார்.

அமன் ஷெராவத்
128 வருட ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே வீரர்.. தொடர்ச்சியாக 5 முறை தங்கம் வென்று கியூபா வீரர் உலக சாதனை!

அரையிறுதிக்கு தகுதிபெற்ற அமன் ஷெராவத்..

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்தப் போட்டியில், இந்தியாவின் அமன் ஷெராவத் வடக்கு மாசிடோனியாவின் விளாடிமிர் எகோரோவை 10-0 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

அதனைத்தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதிப்போட்டியில் அல்பேனியாவின் ஜெலிம்கான் அபகாரோவை எதிர்த்து விளையாடிய அமன், தன்னுடைய அசாத்தியமான பிடியின் மூலம் 12-0 என்ற புள்ளிகணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதிபெற்றார். மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை அன்ஷு மாலிக் 16வது சுற்றில் தோற்று வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

2024 பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக

வினேஷ் போகத் (50 கிலோ),

ஆன்டிம் பங்கால் (53 கிலோ),

அன்ஷு மாலிக் (57 கிலோ),

நிஷா தஹியா (68 கிலோ),

ரீத்திகா ஹூடா (76 கிலோ),

அமன் ஷெராவத் (57 கிலோ)

முதலிய 6 மல்யுத்த வீரர்கள் பங்கேற்ற நிலையில், அதில் அமன் ஷெராவத் ஒருவர் மட்டுமே ஆண் மல்யுத்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

2023 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தைப் வென்றவரான அமன் ஷெராவத், இந்தியாவிற்கான பதக்கத்தின் நம்பிக்கையை உயர்த்தியுள்ளார். அமன் ஷெராவத் பங்கேற்கும் அரையிறுதிப் போட்டியானது இன்று இரவு நடக்கவிருக்கிறது.

அமன் ஷெராவத்
‘அவரின் அழகு, சக வீரர்களின் கவனத்தை சிதறடிக்கிறது’ - நாட்டிற்கே திருப்பி அனுப்பப்பட்ட வீராங்கனை?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com