இந்திய வீரர் வீராங்கனைகள்
இந்திய வீரர் வீராங்கனைகள்pt web

பாரிஸ் ஒலிம்பிக் 2024: உணவுச் சிக்கலில் இந்திய வீரர்கள்.. சமைத்து உண்பதாகவும் அதிர்ச்சி பதிவு!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்கள், களத்தில் மட்டுமின்றி களத்திற்கு வெளியேயும் சவால்களை சந்தித்து வருகின்றனர்.
Published on

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றுள்ள வீரர்- வீராங்கனைகள், பயிற்சியாளர்களுக்காக இரண்டு ஒலிம்பிக் கிராமங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு தங்கியுள்ள வீரர்களுக்கு, அவரவரது கண்டங்களுக்கு ஏற்ப, உணவு வகைகள் தயாரித்து வழங்கப்படுகின்றன.

ஆசிய கண்டத்தைச் சேர்ந்த இந்திய வீரர்- வீராங்கனைகளின் ருசிக்கு ஏற்ப, ஒலிம்பிக் கிராமங்களில் உணவு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் சில வீரர்கள் அருகில் உள்ள தெற்காசிய உணவகங்களை நாடி செல்கின்றனர். மேலும் சிலரோ உணவுப் பொருட்களை வாங்கி வந்து தாங்களாகவே சமைத்து உண்கின்றனர்.

இந்திய வீரர் வீராங்கனைகள்
10 முறை எம். பி.., மக்களவை முன்னாள் சபாநாயகர்.., யார் இந்த சோம்நாத் சாட்டர்ஜி?

சமைத்து உண்பதாகவும் பதிவு

இதுதொடர்பாக பேசிய இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீரர், உயிர் வாழ்வதற்கு உணவு தேவையானது என்பதால், அதனை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு தங்குமிடத்தில் வசதி இல்லை என மற்றொரு வீரர் குறிப்பிட்டார். துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளர் ஜஸ்பால் ராணா, தமது உணவை தானே சமைத்துக் கொள்வதாக கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com