ஆஸ்திரேலிய ஹாக்கி வீரரான தாமஸ் கிரெய்க், ஒலிம்பிக் கிராமத்தில் இருந்து முன்னறிவிப்பின்றி வெளியேறியதாகவும், பாரிஸ் தெருக்களில் உள்ளூர் வியாபாரிகளிடம் இருந்து கொக்கைன் என்ற போதைப்பொருளை வாங்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக அவரை கைது செய்த பிரான்ஸ் காவல் துறையினர் விசாரணைக்கு பிறகு விடுவித்தனர்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக மன்னிப்பு கோரியுள்ள தாமஸ் கிரெய்க், இதனால் அணிக்கு ஏற்பட்ட அவமானத்திற்காக வருந்துவதாகவும் கூறியுள்ளார்.
அதேசமயம், போதை பொருட்கள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சிக்கிய தாமஸ் கிரெய்க்கை ஒலிம்பிக் கிராமத்தைவிட்டு வெளியேற்றி ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி நடவடிக்கை எடுத்துள்ளது.