ஒலிம்பிக் மல்யுத்தம்: ரவிக்குமார் தஹியா, தீபக் புனியா காலிறுதி போட்டிக்கு தகுதி

ஒலிம்பிக் மல்யுத்தம்: ரவிக்குமார் தஹியா, தீபக் புனியா காலிறுதி போட்டிக்கு தகுதி
ஒலிம்பிக் மல்யுத்தம்: ரவிக்குமார் தஹியா, தீபக் புனியா காலிறுதி போட்டிக்கு தகுதி

ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ரவிக்குமார் தஹியா மற்றும் தீபக் புனியா ஆகியோர் காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 57 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தஹியா, கொலம்பிய வீரரை எதிர்கொண்டார். இதில், இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா 13- 2 என்ற புள்ளிக் கணக்கில் கொலம்பிய வீரரை வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றார்.

அதேபோல் 85 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற மற்றொரு மல்யுத்த போட்டியில் இந்திய வீரர் தீபக் புனியா நைஜீரியா வீரரை 12-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதி போட்டிக்கு தகுதிபெற்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com