விளையாட்டு
2024 ஒலிம்பிக் போட்டிகள்: பாரிஸ் நகரம் தேர்வு
2024 ஒலிம்பிக் போட்டிகள்: பாரிஸ் நகரம் தேர்வு
2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பாரீஸ் நகரில் நடைபெற உள்ளன.
பெரு தலைநகர் லிமாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டின் கூட்டம் நடைபெற்றது. இதில் நடைபெற்ற வாக்கெடுப்பில் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு பிரான்ஸ் தலைநகர் பாரீசும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமும் தேர்வு செய்யப்பட்டன. 2020 ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ள நிலையில் அடுத்த 2 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு பாரீஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரங்களுக்கிடைய கடும் போட்டி நிலவியது. 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருந்தது.