விளையாட்டு
உலக தடகள சாம்பியன்ஷிப் - தங்கம் வென்ற எத்தியோப்பிய வீராங்கனை
உலக தடகள சாம்பியன்ஷிப் - தங்கம் வென்ற எத்தியோப்பிய வீராங்கனை
உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியின் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் எத்தியோப்பிய வீராங்கனை அயானா தங்கப் பதக்கம் வென்றார்.
25 வயதான அல்மாஸ் அயானா, பந்தய இலக்கை 30.16 நிமிடங்களில் எட்டினார். மற்றொரு எத்தியோப்பிய வீராங்கனையும், முன்னாள் சாம்பியனுமான திருனெஷ் டிபாபா , இரண்டாவது இடம் பிடித்தார். மகளிருக்கான ஆயிரத்து 500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், ஒலிம்பிக் சாம்பியனான கென்சிபே டிபாபா, நீண்ட போராட்டத்திற்குப் பிறகு இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். ஓட்டப்பந்தயங்களில் எத்தியோபியா வீராங்கனைகளை தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.