நியூசி.க்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: திரும்பினார் தோனி, இந்தியா பேட்டிங்!

நியூசி.க்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: திரும்பினார் தோனி, இந்தியா பேட்டிங்!
நியூசி.க்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டி: திரும்பினார் தோனி, இந்தியா பேட்டிங்!

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடு கிறது. இப்போது, 4 ஒருநாள் போட்டிகள் முடிவடைந்துள்ளன. முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி, தொடரை வென்றுவிட்டது.

நான்காவது ஒருநாள் போட்டியில் இந்தியா பரிதாபமாக தோல்வியடைந்தது. நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் போல்ட், கிராண்ட்ஹோம் ஆகியோரின் ஸ்விங்-கை சமாளிக்க முடியாமல், இந்திய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். இதனால் இந்திய அணி, 19.1 ஓவர்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் 14.4 ஓவர்களில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் மோசமான பேட்டிங்காக இது அமைந்தது. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 

இந்நிலையில் கடைசி ஒரு நாள் போட்டி வெலிங்டனில் இன்று நடக்கிறது. தசைப் பிடிப்பு காரணமாக கடந்த 2 போட்டிகளில் ஆடாமல் இருந்த தோனி, இன்றைய போட்டியில் விளையாடுகிறார். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ரோகித் சர்மாவும், தவானும் களமிறங்கி ஆடி வருகின்றனர். 

அணி விவரம்:

இந்திய அணி
ரோகித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், கேதர் ஜாதவ், ராயுடு, தோனி, ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், சாஹல், புவனேஷ்வர்குமார், முகமது ஷமி.

நியூசிலாந்து அணி:
வில்லியம்சன் (கேப்டன்), முன்றோ, நிக்கோலஸ், ராஸ் டெய்லர், டாம் லாதம், நீஷம், சன்ட்னர், கிராண்ட்ஹோம், அஸ்லே, ஹென்றி, டிரென்ட் போல்ட்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com