இனி நெய்மரே துணை ! கால்பந்து ரசிகர்களின் தவம்

இனி நெய்மரே துணை ! கால்பந்து ரசிகர்களின் தவம்

இனி நெய்மரே துணை ! கால்பந்து ரசிகர்களின் தவம்
Published on

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி தொடங்குவதற்கு முன்பு மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட மூன்று வீரர்களின் பெயர்கள். அர்ஜென்டினாவின் மெஸ்ஸி, போர்ச்சுகலின் ரொனால்டோ மற்றும் பிரேசிலின் நெய்மர் ஜூனியர். இப்போது லீக் சுற்று முடிந்து நாக் அவுட் சுற்று ஆட்டம் தொடங்கிவிட்டது. இதில் பிரான்ஸ் உடன் அர்ஜென்டினா தோல்வியைடந்ததால் மெஸ்ஸி போட்டியிலிருந்து வெளியேறினார்.

இந்த அதிர்ச்சியை ரசிகர்கள் தாங்குவதற்குளாக, உருகுவேயிடம் தோற்று வெளியேறியது கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி. ஒரு நாளில் நடைபெற்ற இரண்டு நாக் அவுட் போட்டியில், உலகக் கால்பந்து ரசிகர்களின் கால்பந்தாட்ட வீரர்கள் இருவர் வெளியேறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரொனால்டோவும், மெஸ்ஸியும் சமகால கால்பந்து நாயகர்கள். இருவரும் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்கள்.

இருவருக்கும் பல்வேறு ஒற்றுமைகள் உண்டு. அதில் சிறுவயதில் இருவருக்கும் ஏற்பட்ட நோயில் இருந்து மீண்டது வரை நீளும். கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலே கூட ரொனால்டோவையும் மெஸ்ஸியையும் ஒப்பிட முடியாது என கூறியுள்ளார். ஆனால் ரொனால்டோ தன்னைவிட மெஸ்ஸிதான் சிறந்த வீரர் என புகழாரம் சூட்டியிருந்தார். தனிப்பட்ட ஆட்டத்திறன் இந்தப் போட்டியிலும் அபாரமாக இருந்தது.

ஆனால், அணி என்பது இவர்கள் மட்டுமல்ல. கால்பந்தாட்டம் என்பது குழு ஆட்டம். அர்ஜென்டினா - போர்ச்சுகலின் தோல்விக்கு மெஸ்ஸியும், ரொனால்டோவும் காரணமல்ல என்பதை போட்டியை முழுவதும் பார்த்தவர்களுக்கு தெரியும். கால்பந்தாட்டப் போட்டியில் முக்கியமாக கருதப்படும் இரண்டு விஷயம் பந்தை பாஸ் செய்வது, பின்பு டிபஃன்ஸ், அதன் பிறகு கோலடிப்பது.

அர்ஜென்டினா, போர்ச்சுகல் அணியின் வீரர்களிடையே பாஸூம், டிபஃன்ஸூம் மிக மிக சுமாராகவே இருந்தது. மெஸ்ஸி, ரொனால்டோ போன்ற ஜாம்பவான்களை வைத்துக்கொண்டு, அணியின் இதர 10 வீரர்கள் ஆடியது எல்லாம் கோமாளி ஆட்டம் என பிரபல ஆங்கில பத்திரிக்கைகள் கடுமையாக விமர்சித்து வருகிறது.

உதாரணத்துக்கு உருகுவே உடனான ஆட்டத்தில் 67 சதவித நேரம் பந்து போர்ச்சுகல் அணியிடமே இருந்தது. ஆனால், உருகுவேயின் டிபன்சை தகர்க்க முடியாமல் திணறியது போர்ச்சுகல். ரொனால்டோ லீக் ஆட்டங்களில் ஹாட்ரிக் உள்பட 4 கோல்களை அடித்துள்ளார். இதுவரை நாக் அவுட் சுற்றில் ஒரு கோல் கூட ரொனால்டோ அடித்ததில்லை. அந்த ராசி அவருக்கு நேற்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தது.

இனி, பிரேசிலை நம்பிதான் கால்பந்தாட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். அதிலும் நெய்மரை நம்பிதான் கால்பந்தாட்ட ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக இருக்கிறார்கள். பிரேசில் தன்னுடைய நாக் அவுட் ஆட்டத்தில் நாளை மெக்சிகோ அணியை எதிர்கொள்கிறது. பிரேசில் அணியில் நெய்மர்தான் ஸ்டார் பிளேயர். இதற்கடுத்து கூட்டின்ஹோதான் முக்கிய வீரர்.

இதர வீரர்கள் எல்லாம் களத்துக்கு புதுசு. எனவே, நெய்மர் மீதான் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பிரேசிலின் முன்னாள் வீரர் காகா, "நெய்மர் காயத்திலிருந்து மீண்டு கொண்டிருக்கிறார், அவரை உணர்ச்சி ரீதியாகக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அவர் நிச்சயம் சாதிப்பார். நெய்மரிடம் ஆட்டத்தில் கற்பனை வளத்துக்கோ உத்திக்கோ பஞ்சமில்லை. அவர் உடல் ரீதியாக 100% தயாராக வேண்டும். எனவே உலகக்கோப்பையில் பிரேசிலுக்கு முக்கிய வீரர் கூட்டின்ஹோதான், நெய்மர் அல்ல என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com