ஆஸ்திரேலிய ஓபன் : 9வது முறையாக பட்டம் வென்றார் ஜோகோவிச்!

ஆஸ்திரேலிய ஓபன் : 9வது முறையாக பட்டம் வென்றார் ஜோகோவிச்!
ஆஸ்திரேலிய ஓபன் : 9வது முறையாக பட்டம் வென்றார் ஜோகோவிச்!

செர்பியாவை சேர்ந்த 33 வயது டென்னிஸ் வீரரும், சர்வதேச ஆடவர் டென்னிஸ் தரவரிசையில் முதல்நிலையில் உள்ளவருமான ஜோகோவிச் ஒன்பதாவது முறையாக ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். இந்த டென்னிஸ் தொடரின் முதல் நான்கு சுற்றுகளில் Jérémy Chardy (6-3, 6-1, 6-2), Frances Tiafoe (6-3, 6-7, 7-6, 6-3), Taylor Fritz (7-6, 6-4, 3-6, 4-6, 6-2), Milos Raonic (7-4, 4-6, 6-1, 6-4) என வீரர்களை வீழ்த்திய ஜோகோவிச், காலிறுதியில் Alexander Zverev (6-7, 6-2, 6-4, 7-6) மற்றும் அரையிறுதியில் Aslan Karatsev (6-3, 6-4, 6-2) வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தார்.


இறுதி போட்டியில் டேனில் மெத்வதேவை (7-5, 6-2, 6-2) என வீழ்த்தி ஒன்பதாவது முறையாக சாம்பியனாகியுள்ளார் ஜோகோவிச்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com