\
ஆஸ்திரேலிய ஓபன் இறுதி: ஜோகோவிச் - மெத்வதேவ் நாளை மோதல்!

ஆஸ்திரேலிய ஓபன் இறுதி: ஜோகோவிச் - மெத்வதேவ் நாளை மோதல்!

ஆஸ்திரேலிய ஓபன் இறுதி: ஜோகோவிச் - மெத்வதேவ் நாளை மோதல்!
Published on

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் நோவக் ஜோகாவிச் மற்றும் ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் நாளை மோதுகின்றனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதி தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ள ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், 6-4, 6-2, 7-5 என்ற நேர் செட்களில் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் உள்ள கிரீஸின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸை வீழ்த்தினார்.

இதன் மூலம் தொடர்ச்சியாக 20 ஆட்டங்களில் வெற்றி கண்டுள்ள மெத்வதேவ், கிராண்ட்ஸ்லாம் போட்டியில் 2-ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதனையடுத்து மெத்வதேவ், நடப்புச் சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை எதிர்கொள்கிறார். ஜோகோவிச்சுடன் கடைசியாக மோதிய 4 ஆட்டங்களில் 3-இல் மெத்வதேவ் வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com