ஆஸி. ஓபன்: நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் ஜோக்கோவிச்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் திருவிழா மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது அரையிறுதியில் ஜோக்கோவிச் 6-0, 6-2, 6-2 என்ற நேர் செட்களில் பிரான்சின் லூக்கஸ் போய்லை மிக எளிதாகத் தோற்கடித்தார்.
இதைத்தொடர்ந்து இன்று ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ரஃபாயல் நடாலும் நோவாக் ஜோக்கோவிச்சும் மோதினர்.
இதில், 6-3, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஜோக்கோவிச் எளிதில் வெற்றி பெற்றார். முதல் நிலை வீரரான ஜோக்கோவிச் இறுதியாட்டத்தில் 2ஆம் நிலை வீரரான ஸ்பெயினை சேர்ந்த ரஃபேல் நாடலை வீழ்த்தியுள்ளார். கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஜோக்கோவிச்சின் 15 வது பட்டம் இது. ஆஸ்திரேலிய ஓபனில் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று ஜோக்கோவிச் சாதனை படைத்துள்ளார்.