மழையால் பாதிக்கப்படுமா இந்தியா - நியூசிலாந்து போட்டி ?

மழையால் பாதிக்கப்படுமா இந்தியா - நியூசிலாந்து போட்டி ?

மழையால் பாதிக்கப்படுமா இந்தியா - நியூசிலாந்து போட்டி ?
Published on

இந்திய-நியூசிலாந்து இடையேயான உலகக் கோப்பை போட்டி மழையால் தாமதமாக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகக் கோப்பை தொடரில் இன்று நடைபெறும் டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இதுவரை இந்த இரு அணிகளும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோற்காததால், இந்தப் போட்டி ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் இந்தப் போட்டி மழையால் தாமதமாக தொடங்கும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த திங்கட்கிழமை முதல் நாட்டிங்காமில் மழை பெய்துவருகிறது. அத்துடன் நாட்டிங்காம் நகரத்திற்கு ‘யெல்லோ அலர்ட்’(Yellow Alert) கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது வானிலை மிகவும் மோசமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி தாமதமாக அல்லது ரத்தாக வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. 

மேலும் கடந்த திங்கட்கிழமை நாட்டிங்காமில் தொடங்கிய மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனையடுத்து இந்திய அணியும் உள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டுவந்தது. அங்குள்ள உள்ளூர் பத்திரிகைகளின் தகவலின்படி புதன்கிழமை இரவு பெய்த மழை இன்று அதிகாலை வரை தொடர்ந்து வருகிறது. அத்துடன் இன்றைய வானிலையில் மதியம் முதல் மீண்டும் மழை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் போட்டி மழையால் ரத்தாகும் பட்சத்தில் நியூசிலாந்து அணியை விட இந்திய அணிக்கே பாதிப்பு அதிகமாகும். ஏனென்றால், நியூசிலாந்து அணி ஏற்கெனவே 3 போட்டியில் வெற்றிப்பெற்றுள்ளது. அத்துடன் இந்தப் போட்டி ரத்தாகி ஒரு புள்ளி கிடைத்தால் அது நியூசிலாந்தின் அரையிறுதி வாய்ப்பை அதிகரிக்கும். அத்துடன் அடுத்து விளையாடவுள்ள 5 போட்டிகளில் 3ல் வெற்றிப் பெற்றாலே நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்துவிடும். 

அதேசமயம் வலுவான இந்திய அணிக்கு இந்தப் போட்டி ரத்தானால் அது ஒரு புள்ளி இழப்பது சற்று பின்னடைவாக காணப்படும். ஏனென்றால் நடப்பு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளுடன் சிறப்பாக தொடங்கியுள்ளது. அதேபோல நியூசிலாந்து அணிக்கு எதிராக கடைசியாக விளையாடிய 7 போட்டிகளில் 6ல் இந்திய அணி வெற்றிப் பெற்றுள்ளது. அத்துடன் டிரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இதுவரை நியூசிலாந்து கடைசியாக விளையாடிய 5 போட்டியில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிப்பெற்றுள்ளது. இதனால் எளிதாக இரண்டு புள்ளிகள் பெறும் வாய்ப்பு இந்தியாவிற்கு மழையால் பறிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com