கை நீட்டிய சர்பிராஸ், கண்டுகொள்ளாமல் போன மேக்ஸ்வெல்!

கை நீட்டிய சர்பிராஸ், கண்டுகொள்ளாமல் போன மேக்ஸ்வெல்!

கை நீட்டிய சர்பிராஸ், கண்டுகொள்ளாமல் போன மேக்ஸ்வெல்!
Published on

கைநீட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் சர்பிராஸ் அகமதுவை கண்டுகொள்ளாமல் சென்ற ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் அதற்காக வருத்தம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், ஜிம்பாப்வே, ஆஸ்திரேலிய அணிகள் பங்கேற்ற முத்தரப்பு டி20 தொடர் ஹராரேவில் நடந்தது. இதன் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஆரோன் பின்ச் 27 பந்துகளில் 47 ரன்களும் டியார்ஸி ஷார்ட் 53 பந்துகளில் 76 ரன்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி, 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்து வெற்று பெற்றது. அந்த அணியின் பஹார் ஜமான் 46 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். சோயிப் மாலிக் 43 ரன்கள் எடுத்தார். 

(சர்பிராஸ் அகமது)


போட்டி நடக்கும்போது பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமதுவுக்கும் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லுக்கும் அடிக்கடி மோதல் ஏற்பட் டது. இந்நிலையில் போட்டி முடிந்தபின் ஒவ்வொரு வீரரும் கை கொடுத்துக்கொண்டனர். சோயிப் மாலிக்கிற்கு கைகொடுத்த மேக்ஸ்வெல் பின்னர் நடுவருக்கு கொடுத்தார். அப்போது சர்பிராஸ் அகமது, மேக்ஸ்வெல்லை நோக்கி கையை நீட்டினார். கோபத்தில் அதைக் கண்டுகொள் ளாமல் வேகமாகச் சென்றார் மேக்ஸ்வெல். இது டிவியில் அப்படியே தெரிந்தது. இதையடுத்து இவரது செயல் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. மேக்ஸ்வெல்லை பலர் திட்டி பதிவிட்டனர்.

பின்னர் இதுபற்றி பதிலளித்த மேக்ஸ்வெல், ‘பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள். பஹார் ஜமான், சோயிப் மாலிக்கை கட்டுப்படுத்த முடிய வில்லை. ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் சோகத்தில் முடிந்துவிட்டது. இருந்தாலும் அதில் இருந்து பாசிட்டிவான விஷயங்களை எடுத்துக் கொண்டிருக்கிறோம். சர்பிராஸ் அகமது கைநீட்டியபோது நான் கண்டுகொள்ளாமல் போனதாக விமர்சனங்கள் வருகின்றன. இதற்காக வருந்துகிறேன். நான் அப்படிப்பட்டவனல்ல. போட்டியை அப்படி அணுகுவதும் இல்லை. அவர் கையை நீட்டியபோது நான், உண்மையிலேயே அவரைக் கவனிக்கவில்லை. இப்போது ஓட்டல் அறையில் அவரை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன். இங்கு கைகொடுப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com