\
“தோனி அளவுக்கு வேகம் இல்லை தானே” தவனிடம் நகைச்சுவையாக கேட்ட ஆஸி கேப்டன்

“தோனி அளவுக்கு வேகம் இல்லை தானே” தவனிடம் நகைச்சுவையாக கேட்ட ஆஸி கேப்டன்

“தோனி அளவுக்கு வேகம் இல்லை தானே” தவனிடம் நகைச்சுவையாக கேட்ட ஆஸி கேப்டன்
Published on

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதோடு தொடரையும் 2 - 0  என்ற கணக்கில் வென்றுள்ளது. இந்த போட்டியில் காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச் ஒய்வு எடுத்துக் கொள்ள தற்காலிக கேப்டனாக நியமிக்கப்பட்டார் விக்கெட் கீப்பரான மேத்யூ வேட். 

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 194 ரன்களை குவித்தது. பின்னர் விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் தவன் சிறப்பாக விளையாடினார். இந்தியா பேட்டிங் செய்த போது ஒன்பதாவது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் மிச்சேல் ஸ்வெப்சன் வீசினார். அந்த ஓவரில் வைடாக வீசப்பட்ட பந்தை ஸ்ட்ரைக்கில் இருந்த தவன் மிஸ் செய்ய, பந்தை பற்றியவுடன் ஸ்டெம்பிங் செய்ய முயன்று இருப்பார்.

இருப்பினும் அதை மிஸ் செய்த அவர் “தோனி அளவுக்கு வேகம் இல்லை தானே” என தவனிடம் கேட்டிருப்பார். அது ஸ்டெம்பில் இருந்த மைக்கில் பதிவாகியுள்ளது. தவனும் இல்லை என்பதை போல சிரித்த படி அடுத்த பாலை எதிர்கொள்ள தயாராவர். 

தோனி சர்வதேச கிரிக்கெட்டில் மின்னல் வேக ஸ்டெம்பிங்கிற்காக பரவலாக அறியப்படுபவர். அவரை நினைவு படுத்தும் விதமாக வேட் பேசியிருந்தாலும் அது தோனியின் ரசிகர்களை கடுப்பேற்றியதால் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர் ரசிகர்கள். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com