இங்கிலாந்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவில்லை: ஹாக்கி இந்தியா அறிவிப்பு

இங்கிலாந்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவில்லை: ஹாக்கி இந்தியா அறிவிப்பு
இங்கிலாந்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கவில்லை: ஹாக்கி இந்தியா அறிவிப்பு

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கப்போவதில்லை என இந்திய ஹாக்கி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து வருபவர்கள் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பதை ஏற்க முடியாது என கூறியுள்ள ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவர் ஞானேந்திரா, காமன்வெல்த் போட்டிக்கும், ஆசிய போட்டிகளுக்கும் இடையே குறைந்த நாட்களே இருப்பதாக தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் பிரான்சில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு, ஆசிய கோப்பை போட்டியே தகுதி போட்டியாக இருப்பதால், அதில் இந்தியா கவனம் செலுத்தவிருக்கிறது என்றும் ஞானேந்திரா கூறியுள்ளார். முன்னதாக, இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டியிலிருந்து இங்கிலாந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com