'ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்கினால்..' இர்பான் பதான் கொடுத்த எச்சரிக்கை

'ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்கினால்..' இர்பான் பதான் கொடுத்த எச்சரிக்கை

'ஹர்திக் பாண்டியாவை கேப்டன் ஆக்கினால்..' இர்பான் பதான் கொடுத்த எச்சரிக்கை

இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியாவை  நியமிக்க வேண்டும் என பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையில் இர்பான் பதான் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று முடிந்த டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா அரையிறுதி சுற்றோடு வெளியேறியதைத் தொடர்ந்து, இந்திய டி20 அணியில் கேப்டன் மாற்றம், இளம் வீரர்களை கொண்ட வலுவான அணியை கட்டமைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர். இதனால் இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதில் ஹர்திக் பாண்டியாவை  நியமிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆனால் இத்தகைய கருத்துகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், கேப்டனை மாற்ற வேண்டும் என்று எண்ணினால் அதற்கான முடிவுகளிலும் பல மாற்றங்கள் நிகழும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ''ஹர்திக் பாண்டியாவுக்கு சாதாரணமாகவே போட்டிகளின் போது காயம் ஏற்படும். இதன் காரணமாக, இவர் சில சமயம் போட்டிகளில் இருந்து விலகி வருகிறார். ஒருவேளை இவர் கேப்டனாக இருக்கும் பட்சத்தில் உலகக் கோப்பை தொடருக்கு முன் காயம் ஏற்பட்டால், வேறு ஒரு கேப்டனை தேட வேண்டிய நிலை வரும். இதனால், தொடக்க வீரர்களை போல, ஒன்றுக்கு இரண்டு கேப்டன்களை தேர்வு செய்து தயார்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் தனது ட்விட்டர் பதிவில் இந்திய அணிக்கு அவசியமான நான்கு ஆலோசனைகளை தந்துள்ளார். அதன்படி, 1) தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் சுதந்திரமாக ஆட வேண்டும். 2) ரிஸ்ட் ஸ்பின்னர் அவசியம் இருக்க வேண்டும். 3) சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களை அடையாளம் காண வேண்டும் 4) நீங்கள் கேப்டனை மாற்ற முடிவை எடுத்தால் நீங்கள் எதிர்பார்க்கும் முடிவுகள் உங்களுக்கு கிடைக்காது என்று இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.

தவற விடாதீர்: மீண்டும் இந்திய அணி நிர்வாக குழுவில் தோனியா? பிசிசிஐ போடும் புது கணக்கு!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com