\
நார்வே செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த், கார்ல்சன் தொடர்ந்து முன்னிலை!

நார்வே செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த், கார்ல்சன் தொடர்ந்து முன்னிலை!

நார்வே செஸ் போட்டி: விஸ்வநாதன் ஆனந்த், கார்ல்சன் தொடர்ந்து முன்னிலை!
Published on

நார்வே செஸ் போட்டியின் நான்காவது சுற்று முடிவில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் இணைந்து முதலிடத்தில் உள்ளனர். இந்திய கிராண்ட் மாஸ்டர் ஆனந்த், நான்காவது சுற்றில் அமெரிக்காவின் வெஸ்லே சோவை எதிர்கொண்டார்.

இதில் ஆனந்த் ஒரு புள்ளி மட்டுமே எடுத்தநிலையில், சோ ஒன்றரை புள்ளிகள் பெற்றார். எனினும் ஒட்டுமொத்தமாக 4 சுற்றுகளின் முடிவில் ஆனந்த் எட்டரை புள்ளிகளுடன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். அனிஷ் கிரியை மூன்றுக்கு - பூஜ்ஜியம் என்ற கணக்கில் தோற்கடித்த நார்வேயின் மேக்னஸ் கார்லசனும் ஆனந்த்துடன் இணைந்து முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com