கொரோனா பரவல் அச்சம் காரணமாக ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கிற்கு தனது நாட்டு விளையாட்டு வீரர்களை அனுப்புவதில்லை என வட கொரியா அரசு முடிவு செய்துள்ளது.
ஏற்கெனவே 1988-ஆம் ஆண்டில் பனிப்போர் காரணமாக சியோலில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளை வடகொரியா புறக்கணித்தது. டோக்கியோ ஒலிம்பிக் வடகொரியா மற்றும் தென் கொரிய நாடுகளுக்களுக்கிடையில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் வளர்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று சியோல் நம்புவதாக தென் கொரியாவின் ஒருங்கிணைப்புத்துறை அமைச்சகம் ஏற்கெனவே கூறியது. ஆனால் "அது நடக்கவில்லை என்று நாங்கள் வருந்துகிறோம்," என்று தென்கொரியா தனது அறிக்கையில் கூறியிருக்கிறது.