\
மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை

மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை

மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை
Published on

பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவர் பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றுள்ளார்.

இந்நிலையில் இவருக்கு விளையாட்டுத்துறையின் உயரிய விருதான ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது வழங்க பரிந்துரை செய்யப்ப்பட்டுள்ளது. மேலும், வீராங்கனைகள் வினேஷ் போகத்(மல்யுத்தம்), மாணிகா பத்ரா(டேபில் டென்னிஸ்) ஆகியோர் பெயரும் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ரோகித் சர்மாவின் பெயரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com