“அம்மாவுக்கு இந்தத் தங்கப் பதக்கம் பிறந்தநாள் பரிசு” - பி.வி.சிந்து நெகிழ்ச்சி

“அம்மாவுக்கு இந்தத் தங்கப் பதக்கம் பிறந்தநாள் பரிசு” - பி.வி.சிந்து நெகிழ்ச்சி

“அம்மாவுக்கு இந்தத் தங்கப் பதக்கம் பிறந்தநாள் பரிசு” - பி.வி.சிந்து நெகிழ்ச்சி
Published on

தான் பெற்ற வெற்றியை தன் தாய்க்கு சமர்ப்பணம் செய்வதாக உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் பாசில் நகரில் நடைபெற்ற உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உலகின் நான்காம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நசோமி ஒகுஹாராவை பி.வி.சிந்து எதிர் கொண்டார். இதில் வெற்றிபெற்ற சிந்து உலக சாம்பியன்ஷிப் பேட்மின்டன் சாம்பியன் பட்டத்தை முதன்முறையாக வென்று சாதனை படைத்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு பிரதமர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பெற்ற வெற்றியை தன் தாய்க்கு சமர்ப்பணம் செய்வதாக சிந்து தெரிவித்துள்ளார்.

தன் வெற்றி குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்ட சிந்து, ''எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த வெற்றியை பகிர்ந்து கொள்ள வார்த்தைகளே இல்லை. நான் நீண்ட நாட்களாக இந்த வெற்றிக்காக காத்திருந்தேன். கடந்த முறை வெள்ளி வென்றேன். தற்போது நான் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளேன். எனது வெற்றிக்கு காரணம் என் பயிற்சியாளர்கள் கோபி, கிம் மற்றும் என் பெற்றோர். என் மீது நம்பிக்கை வைத்து உறுதுணையாக இருந்த ஸ்பான்சர்ஸ் மற்றும் ஊக்கப்படுத்திய ஊழியர்களும் வெற்றிக்கு காரணமானர்வர்கள்தான். 

இந்த வெற்றியை என்னுடைய அம்மாவுக்கு சமர்ப்பிக்கிறேன். என் அம்மாவின் பிறந்த நாள் அன்றே நான் சாம்பியன் பட்டம் வென்றுள்ளேன். அவரது பிறந்தநாளுக்கு எதாவது பரிசுகொடுக்க வேண்டுமென நினைத்தேன். இப்போது என்னுடைய தங்கப் பதக்கத்தை அவருக்கு பரிசாக கொடுக்கிறேன். என் பெற்றோரால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன்'' எனத் தெரிவித்தார்.

மேலும், ''தேசிய கீதம் ஒலித்தவாறே தேசியக்கொடி என் பின்னால் பறந்தது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியான தருணம். நான் புல்லரித்துபோனேன். நாட்டுக்காக விளையாடுவது பெருமையான தருணம். இறுதிப் போட்டியை ஒரு சாதாரண போட்டி என்றே நான் நினைத்து கொண்டேன். இறுதிப்போட்டி என்ற பிரமிப்பை என்னுள் நான் கொண்டிருக்கவில்லை. 100 சதவீதம் என் உழைப்பை செலுத்தினேன்'' எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com