"அடுத்தாண்டிலும் அதிரடி தொடரும்"- ரோகித் சர்மா நம்பிக்கை

"அடுத்தாண்டிலும் அதிரடி தொடரும்"- ரோகித் சர்மா நம்பிக்கை
"அடுத்தாண்டிலும் அதிரடி தொடரும்"- ரோகித் சர்மா நம்பிக்கை

இந்தாண்டு சிறப்பாக விளையாடியது போல அடுத்தாண்டும் விளையாடுவேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனான ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப்பெற்று தொடரை கைப்பற்றியது. இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மாவுக்கு தொடர் நாயகன் விருதும் வழங்கப்பட்டது. மேலும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஓராண்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற ஜெயசூர்யாவின் சாதனையை 22 ஆண்டுகளுக்குப் பின் இந்திய துணைக் கேப்டன் ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.

1997-ஆம் ஆண்டில் இலங்கையின் சனத் ஜெயசூர்யா 2 ஆயிரத்து 387 ரன்கள் அடித்திருந்ததே ஒராண்டில் தொடக்க வீரர் ஒருவர் எடுத்த அதி‌கப்பட்ச ரன்னாக இருந்தது. அதனை மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3-ஆவது ஒரு நாள் போட்டியின்போது ரோகித் சர்மா முறியடித்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ரோகித் " இந்தாண்டு தனிப்பட்ட முறையில் என்னுடைய பேட்டிங்கை நான் மிகவும் ரசித்தேன், இத்துடன் இது முடிந்துவிடவில்லை. அதிரடிகள் அடுத்தாண்டும் தொடரும். உலகக் கோப்பையை வெல்ல முடியாததுதான் பெரிய குறையே தவிர, டெஸ்ட் கிரிக்கெட், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்தியா சிறப்பான வெற்றியே பெற்றுள்ளது" என்றார்.

மேலும் தொடர்ந்த ரோகித் "அடுத்தாண்டு நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். அங்கேயும் எங்களது வெற்றிகள் தொடரும்" என்றார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com