தோனி, கோலி, ரோகித் இல்லை: தனது ஐபிஎல் டி20 அணியை அறிவித்தார் சச்சின்! யார் கேப்டன்?

தோனி, கோலி, ரோகித் இல்லை: தனது ஐபிஎல் டி20 அணியை அறிவித்தார் சச்சின்! யார் கேப்டன்?
தோனி, கோலி, ரோகித் இல்லை: தனது ஐபிஎல் டி20 அணியை அறிவித்தார் சச்சின்! யார் கேப்டன்?

சச்சின் டெண்டுல்கர் தனது இந்த ஐபிஎல் சீசனுக்கான டி20 அணியை அறிவித்துள்ளார். தோனி, விராட் கோலி, ரோகித் ஷர்மா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் யாரும் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

ஐபிஎல் 2022 தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அறிமுகமான தனது முதல் சீசனில் இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தொடர் முடிவடைந்த நிலையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இந்த ஐபிஎல் சீசனுக்கான டி20 அணியை அறிவித்துள்ளார். கோப்பையை வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக அறிவித்துள்ளார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஜோஸ் பட்லர் மற்றும் ஷிகர் தவான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் சச்சின் அணியில் 3வது இடத்தில் உள்ளார், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் மிடில் மற்றும் லோயர் ஆர்டரில் உள்ளனர். ரஷித் கான், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் முன்னணி பந்துவீச்சாளர்களாக உள்ளனர்.

தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் கேப்டன் ஹர்திக் பாண்டியாவைப் பற்றி சச்சின் பேசுகையில், "என்னைப் பொறுத்தவரை, ஹர்திக் இந்த சீசனில் தனித்துவமான கேப்டனாக இருந்தார். ஏனெனில் அவர் மனதில் தெளிவாக இருந்தார். அவர் ஆக்டிவாக இருந்தார். எதிரணி பவுண்டரி அடித்த பிறகு ஒரு ஃபீல்டரை எல்லையில் வைப்பேன். நான் எப்போதும் சொல்வேன், 'வருந்தாதே, கொண்டாடு' என்று. உங்களால் கொண்டாட முடிந்தால், எதிரணியை வீழ்த்த முடியும் என்று அர்த்தம், அதைத்தான் ஹர்திக்கின் கேப்டன்சியில் நாங்கள் பார்த்தோம். அதனால்தான் ஹர்திக்கையே கேப்டனாக வைத்திருப்பேன்” என்று கூறினார்.

"ஹர்திக் இந்த சீசனில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சில முக்கியமான ஆட்டங்களை அவர் விளையாடினார். கேஎல் ராகுலைப் போலவே, அவர் விருப்பப்படி சிக்ஸர்களை அடிக்க முடியும். அவருக்கு மிருகத்தனமான சக்தி உள்ளது. அவரது பேட் ஸ்விங் அழகாக இருக்கிறது. அவர் பந்தை அடிக்க விரும்பும் போது ஸ்திரத்தன்மை, அது மிகவும் அருமை. " என்று அவர் மேலும் கூறினார்.

சச்சின் டெண்டுல்கரின் டி20 சீசன் அணி: ஷிகர் தவான், ஜோஸ் பட்லர், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், லியாம் லிவிங்ஸ்டோன், தினேஷ் கார்த்திக், ரஷித் கான், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com