தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் இல்லை! இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாக். பவுலிங் தேர்வு!

தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் இல்லை! இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாக். பவுலிங் தேர்வு!
தீபக் ஹூடா, தினேஷ் கார்த்திக் இல்லை! இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற பாக். பவுலிங் தேர்வு!

ஆசிய கோப்பை டி20 தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் ஆசிய கோப்பை டி20 தொடரின் ‘சூப்பர் 4’ சுற்று ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மீண்டும் பலப்பரீட்சையில் இறங்குகின்றன. லீக் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. தற்போது, 2-வது முறையாக மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆட்டம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் இருவரும் இன்றைய போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கலாம். ஹாங்காங் அணிக்கு எதிராக 26 பந்துகளில் 68 ரன்கள் விளாசிய சூர்யகுமார் யாதவிடமிருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹர்திக் பாண்டியா இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக மாறியிருக்கிறார். இன்றைய போட்டியிலும் அவர் தனது திறமையை வெளிப்படுத்த முயற்சிப்பார். 

பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான், பாக்கா் ஸமான், குஷ்தில் ஷா ஆகியோா் அற்புதமாக பேட்டிங் செய்து வருகின்றனா். லீக் சுற்றில் இந்தியாவிடம் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி வீரர்கள் வரிந்துகட்டுவார்கள். அதேசமயம் பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 2-வது வெற்றியை ருசிக்கும் முனைப்புடன் இந்தியா இன்று களமிறங்க உள்ளது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நகரப்போகும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இந்திய அணியில் காயம் காரணமாக விலகிய ஜடேஜாவுக்கு பதிலாக அக்சர் படேல் களமிறங்குகிறார். கடந்த ஆட்டத்தில் ஓய்வளிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா மீண்டும் களம் காண்கிறார். தீபக் ஹூடாவுக்கு பதிலாக ரவி பிஷ்னோய் களமிறங்க உள்ளதாக இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா தெரிவித்தார். இந்த ஆட்டத்தில் ரிஷப் பண்ட் களமிறங்கும் நிலையில், தினேஷ் கார்த்திக் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

இந்திய அணி:

கே.எல்.ராகுல், ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, ஹர்திக் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்.

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), பாபர் அசாம் (கேப்டன்), ஃபகார் ஜமான், குஷ்தில் ஷா, இப்திகார் அகமது, ஷதாப் கான், ஆசிப் அலி, முகமது நவாஸ், ஹாரிஸ் ரவுஃப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com