சுரேஷ் ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை ?

சுரேஷ் ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை ?
சுரேஷ் ரெய்னா மீண்டும் சிஎஸ்கே அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை ?

சொந்தக்காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் பங்கேற்காமல் துபாயில் இருந்து இந்தியா திரும்பிய சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னாவால் மீண்டும் அணிக்கு திரும்பி விளையாட வாய்ப்பில்லை என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

13 ஆவது ஐபிஎல் தொடர் இம்மாதம் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக சிஎஸ்கே வீரர்கள் கடந்த மாதம் துபாய் சென்றனர். அங்கு அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வீரர்கள் இரண்டு பேர் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் சொந்தக் காரணங்களுக்காக சிஎஸ்கே துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா இந்தியா திரும்பினார்.

இதனையடுத்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியது. தோனியுடனான மோதல், சிஎஸ்கே நிர்வாகத்துடன் அதிருப்தி என செய்திகள் வெளியானது. இதற்கெல்லாம் சிஎஸ் நிர்வாகமும், ரெய்னாவும் அடுத்தடுத்த முற்றுப்புள்ளி வைத்தனர். இதனையடுத்து அண்மையில் பேசிய ரெய்னா "கொரோனா தொற்று அச்சுறுத்தலினால் நான் இங்கு என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இருந்தாலும் இப்போதும் நான் வலைப் பயிற்சி செய்து கொண்டு தான் இருக்கிறேன். நான் சென்னை அணியின் முகாமிற்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ளன" என தெரிவித்தார்.

இந்நிலையில் "டைம்ஸ் ஆஃப் இந்தியா"வுக்கு பேட்டியளித்துள்ள பிசிசிஐ நிர்வாகி ஒருவர் "சுரேஷ் ரெய்னா நாடு திரும்பியதற்கான உண்மையான காரணம் என்னவென்று ஆராயப்பட வேண்டும். அவர் குடும்ப பிர்சனைக்காக திரும்பினாரா, தோனியுடன் பிரச்னையா, சிஎஸ்கே நிர்வாகத்துடன் பிரச்னையா என எதுவாகி இருந்தாலும் அவர் மன அழுத்தத்தினால் திரும்பினாரா என தெரிய வேண்டும். அப்படி அவர் மன அழுத்தத்தில் திரும்பியிருந்தால் நிச்சயம் அவரை ஐபிஎல் தொடரில் பங்கேற்க அனுப்ப முடியாதுய யாருக்கேனும் ஏதும் பிர்சனையானால் யார் பொறுப்பேற்பது" என கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com