\
கிரிக்கெட் வீரர் நிதிஷ் ராணா திருமண நிச்சயதார்த்தம்!

கிரிக்கெட் வீரர் நிதிஷ் ராணா திருமண நிச்சயதார்த்தம்!

கிரிக்கெட் வீரர் நிதிஷ் ராணா திருமண நிச்சயதார்த்தம்!
Published on

கிரிக்கெட் வீரர் நிதிஷ் ராணா, தனது நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.

கடந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடியவர், ஆல்ரவுண்டர் நிதீஷ் ராணா. டெல்லியை சேர்ந்த இவர், சாச்சி மார்வா (Sachi Marwah) என்பவரை நீண்ட நாட்களாகக் காதலித்து வந்தார். இந்நிலையில் இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடந்துள்ளது. இதை நிதிஷின் நண்பரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான துருவ் ஷோரி தெரிவித்துள்ளார். திருமணம் எப்போது என்கிற தகவலை அவர் வெளியிடவில்லை.

மணப்பெண் சாச்சியும் டெல்லியை சேர்ந்தவர். ஆர்க்கிடெக்ட்டான இவர், ராணா விளையாடும் போட்டிகளின் போது தவறாமல் ஆஜராகி வந்தா ர் . இவர்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது. கிரிக்கெட் வீரர்களும் வாழ்த்துகளைத் தெரிவித்துள் ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com