மெஸ்சிக்கு எதிராக இரண்டு கோல்கள் அடிப்பேன் என நைஜீரியா வீரர் அகமத் முசா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை கால்பந்து போட்டி ரஷ்யாவில் நடைப்பெற்று வருகிறது. தற்போது லீக் சுற்று போட்டிகள் நடைப்பெற்று வருகின்றன. இதில் கோப்பை வெல்லும் என கணிக்கப்பட்ட அர்ஜென்டினா அணி முதல் போட்டியில் டிராவும், இரண்டாவது போட்டியில் கோல் எதுவும் அடிக்காமலும் அதிர்ச்சி அளித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி இந்தத்தொடரில் இன்னும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. மெஸ்சியின் சொதப்பலான ஆட்டத்தால் ரசிகர்கள் அவரை வசைப்பாடி வருகின்றனர். இந்நிலையில் நைஜீரியா அணியின் வீரர் முசா தற்போது மெஸ்சியை சீண்டியுள்ளார்.
நேற்றுமுன் தினம் நடைப்பெற்ற போட்டியில் நைஜீரியா அணி ஐஸ்லாந்தை எதிர்க்கொண்டது. இந்தப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட முசா 2 கோல்கள் அடித்து அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். இந்தப்போட்டியில் நைஜீரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதில் இரண்டு கோல்களை முசா தான் அடித்தார். இந்தப்போட்டிக்கு பின்னர் பேசிய முசா, நான் மெஸ்சிக்கு எதிராகவும் அர்ஜென்டினாவுக்கு எதிராகவும் விளையாடும் போது 2 கோல்களை அடிக்கிறேன். கடந்த உலக்கோப்பை போட்டியில் அர்ஜென்டினாவுக்கு எதிராக இரண்டு கோல்களை பதிவு செய்தேன். கிளப் போட்டிகளில் பார்சிலோனா அணிக்காக மெஸ்சி விளையாடினார். அந்தப்போட்டியிலும் இரண்டு கோல்களை பதிவு செய்தேன். அதனால் லீக் சுற்று போட்டியில் அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு கோல்கள் அடிப்பதற்கு வாய்ப்புள்ளது என்றார்.
எல்லா நேரத்திலும் சிறந்த வீரர் (Greatest Of All Time ஆங்கிலத்தில் சுருக்கமாக GOAT) முசா தான் என அவரது ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். ஏற்கெனவே மெஸ்சியின் மோசமான ஆட்டத்தால் கோபமடைந்த ரசிகர்கள் மெஸ்சி GOAT அல்ல Sheep என ட்விட்டரில் கடுமையாக சாடிவருகின்றனர். இந்நிலையில் முசாவின் பேச்சு மெஸ்சிக்கு மேலும் நெருக்கடியை கொடுத்துள்ளது. அர்ஜென்டினா - நைஜீரியா அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 26ஆம் தேதி நடைப்பெறுகிறது. தனது கடைசி லீக் போட்டியில் கட்டாயம் வெற்றிப்பெற வேண்டும் என நிர்பந்தத்தில் அர்ஜென்டினா களமிறங்குகிறது. உலக்கோப்பை தகுதிச் சுற்றின் கடைசிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து, அர்ஜென்டினாவை உலக்கோப்பை தொடருக்கு அழைத்து வந்தார். அதேபோல் லீக்போட்டியிலும் மெஸ்சி செயல்பட்டு நாக் அவுட் சுற்றுக்கு அழைத்து செல்வாரா என அவர்களது ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.