இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்த நிகிடி
இந்தியாவுக்கு எதிரான 5வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 5வது ஒருநாள் போட்டி இன்று நடைப்பெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி ரோகித்-தவான் தொடக்கத்தில் களமிறங்கினர். தவான் 38 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் சிறப்பாக விளையாடிய கோலி ரன் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய ரகானேவும் 18 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். தென்னாப்பிரிக்க தொடரில் ரன் எடுக்க தடுமாறி வரும் ரோகித் இந்தப்போட்டியில் நிதானமாக விளையாடி தனது 17வது சதத்தை பூர்த்தி செய்தார். 115 ரன்கள் எடுத்த நிலையில் ரோகித் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்திய அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்க தரப்பில் அபாரமாக பந்துவீசிய நிகிடி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தென்னாப்பிரிக்கா அணிக்கு 275 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.