"அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் கிராமத்திலிருந்து வருவார்கள்" - சேலத்தில் டிராவிட் பேச்சு

"அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் கிராமத்திலிருந்து வருவார்கள்" - சேலத்தில் டிராவிட் பேச்சு
"அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் கிராமத்திலிருந்து வருவார்கள்" - சேலத்தில் டிராவிட் பேச்சு

அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறிய நகரங்கள், கிராமங்களில் இருந்துதான் வரவுள்ளார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தேசிய கிரிக்கெட் அகாடெமியின் தலைவருமான ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள காட்டு வேப்பிலைப்பட்டியில் சேலம் கிரிகெட் பவுண்டேசன் சார்பில் 16 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சத்து 5 ஆயிரம் சதுர அடியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ராகுல் டிராவிட், " அடுத்த தலைமுறை கிரிக்கெட் வீரர்கள் சிறிய நகரங்கள், கிராமங்களில் இருந்துதான் வரவுள்ளார்கள். சேலத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், இந்த மைதானத்தில் என்னால் விளையாட முடியவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

சென்னை, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், கோவை உள்ளிட்ட நகரங்களை தொடர்ந்து சேலத்திலும் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானம் கிரிக்கெட் ஆர்வம் கொண்ட இளைஞர்களுக்கு மிகுந்த பயன் உள்ளதாக இருக்கும். சேலத்தைச் சேர்ந்த பந்துவீச்சாளர் நடராஜன் இளம் வீரர்களுக்கு ஊக்கமளிக்கிறார்" என்றார் அவர்.

இதனிடையே, புதிதாக திறந்து வைக்கப்பட்டுள்ள மைதானத்தில் ராகுல் டிராவிட் பந்துவீச, முதல்வர் பழனிசாமி பேட்டிங் செய்து மகிழ்ந்தார். இதனை அங்கிருந்த அனைவரும் பார்த்து ரசித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com