’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்

’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்

’சேலையில் கிரிக்கெட் ஆடும் ஸ்டில்கள்’ வங்கதேச வீராங்கனை சஞ்ஜிதாவின் அசத்தல் திருமண ஆல்பம்
Published on

வங்கதேச மகளிர் கிரிக்கெட் அணியின் சீனியர் வீராங்கனையான சஞ்ஜிதா இஸ்லாமின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. 

வங்கதேசத்தில் முதல் தர கிரிக்கெட் விளையாடி வரும் Mim Mosaddeak என்பவரை சஞ்ஜிதா திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வெட்டிங் போட்டோ ஷுட்டிற்காக கிரிக்கெட் களத்தில் சேலை கட்டிக்கொண்டு கிரிக்கெட் விளையாடும் போது போட்டோவுக்கும் போஸ் கொடுத்துள்ளார்  புது மணப்பெண்ணான சஞ்ஜிதா. 

தற்போது அது நெட்டிசன்கள் மத்தியில் வைரல் ஹிட் அடித்துள்ளது.

‘கிரிக்கெட் பிளேயரின் வெட்டிங் போட்டோ ஷுட் இப்படித் தான் இருக்கும்’ என கேப்ஷன் போட்டு ஐசிசி சஞ்ஜிதா செலவு  கட்டிக்கொண்டு கிரிக்கெட் விளையாடும் போட்டோவை ட்வீட் செய்துள்ளது. 

வங்கதேச அணிக்காக 16 ஒருநாள் மற்றும் 54 டி20 போட்டிகளில் சஞ்ஜிதா விளையாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com