99 ரன் விளாசிய ஹபீஸின் அதிரடி வீண் : ’டிம் - வில்லியம்சன்’ கூட்டணியால் நியூசிலாந்து வெற்றி
நியூசிலாந்தின் ஹேமில்டன் நகரில் நடைபெற்ற பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 163 ரன்களை அந்த அணி குவித்தது. முகமது ஹபீஸ் 57 பந்துகளில் 99 ரன்களை குவித்தார்.
தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 19.2 ஓவர்களில் 164 ரன்களை எட்டி வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்கார மார்ட்டின் கப்தில் மட்டுமே 21 ரன்களில் வெளியேறினார். அதன் பிறகு டிம் சைஃபர்ட் மற்றும் கேப்டன் வில்லியம்சன் பார்ட்னர்ஷிப் அமைத்து 129 ரன்களை குவித்தனர்.
இறுதி வரை இருவரும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். டிம் 84 ரன்களும், வில்லியம்சன் 57 ரன்களும் குவித்தனர். டிம் கடந்த போட்டியிலும் அரை சதம் விளாசியிருந்தார்.