டி20 உலகக்கோப்பை: 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து - தடுமாறும் இலங்கை அணி

டி20 உலகக்கோப்பை: 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து - தடுமாறும் இலங்கை அணி
டி20 உலகக்கோப்பை: 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து - தடுமாறும் இலங்கை அணி

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிவரும் இலங்கை அணி, நியூசிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் டி20 உலகக்  கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நியூசிலாந்து - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி பேட்டிங் செய்த நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது. அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய க்ளென் பிலிப்ஸ் அபாரமாக ஆடி சதம் விளாசினார். அவர் 64 பந்துகளில் 10  பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் குவித்தார். இலங்கை அணி தரப்பில் கசுன் ரஷிதா 2 விக்கெட்டும், தீக்‌ஷனா, டி சில்வா, ஹசரங்கா, லஹிரு குமாரா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிவரும் இலங்கை அணி நியூசிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறி வருகிறது.  அந்த அணி 24 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com