இந்தியா - நியூசிலாந்து 2-வது ஒருநாள் போட்டி மழையால் 29 ஓவர்களாக குறைப்பு

இந்தியா - நியூசிலாந்து 2-வது ஒருநாள் போட்டி மழையால் 29 ஓவர்களாக குறைப்பு
இந்தியா - நியூசிலாந்து 2-வது ஒருநாள் போட்டி மழையால் 29 ஓவர்களாக குறைப்பு

இந்தியா - நியூசிலாந்து இடையேயான 2-வது ஒருநாள் போட்டி மழையால் 29 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

நியூசிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது. ஹாமில்டனில் பெய்த மழை காரணமாக மைதானத்தில் ஈரப்பதம் நிலவியதால் 'டாஸ்' போடுவதில் 15 நிமிட தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் சுப்மன் கில்  களமிறங்கினர். 4.5 ஓவர்களில் இந்தியா 22 ரன்கள் சேர்த்த நிலையில் மழை குறிக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பின் ஆட்டம் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. சுப்மன் கில் 19 ரன்னும், ஷிகர் தவான் 2 ரன்னும் அடித்திருந்தனர். தற்போது மழை நின்றுள்ளதை அடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 29 ஓவராக  குறைக்கப்பட்டு ஆட்டம் தொடங்கி உள்ளது. தவான்  3 ரன்னில் ஆட்டமிழந்துள்ள நிலையில் சூர்யகுமார் யாதவ் இறங்கி ஆடி வருகிறார்.  

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரை இழக்க வேண்டியது வரும் என்பதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் ஷர்துல் தாக்குருக்கு பதிலாக தீபக் சாஹரும், சஞ்சு சாம்சனுக்கு பதிலாக தீபக் ஹூடாவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தியா (பிளேயிங் லெவன்): ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, வாஷிங்டன் சுந்தர், தீபக் சாஹர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்

நியூசிலாந்து (பிளேயிங் லெவன்): பின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(கேப்டன்), டேரில் மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், மைக்கேல் பிரேஸ்வெல், மாட் ஹென்றி, டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com