'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச முடிவு.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா நியூசிலாந்து?

'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச முடிவு.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா நியூசிலாந்து?
'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச முடிவு.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா நியூசிலாந்து?

டி20 உலகக் கோப்பை 'சூப்பர்-12' சுற்று போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் முதல் சுற்று நிறைவடைந்தது. இந்நிலையில் 'சூப்பர் 12' சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் சிட்னியில் இன்று சந்திக்கின்றன. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. இதையடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங்கை தொடங்கியுள்ளது.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

நியூசிலாந்து: டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), ஃபின் ஆலன், கேன் வில்லியம்சன் (கேப்டன்), க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், டிம் சவுத்தி, இஷ் சோதி, லாக்கி பெர்குசன், டிரெண்ட் போல்ட்

ஆஸ்திரேலியா: ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட்

கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. மேலும், ஆஸ்திரேலியயா அணியை அவர்களது சொந்த மண்ணில் நியூசிலாந்து 2011ஆம் ஆண்டுக்கு பிறகு எந்த போட்டியிலும் வீழ்த்தியதில்லை. அதற்கு பதிலடி கொடுக்க நியூசிலாந்து அணி தீவிரம் காட்டுவதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் களமிறங்கும் ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் விளையாடுவது சாதகமான விஷயம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com