நியூசிலாந்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? - டாஸ் வென்ற முதலில் பேட்டிங் தேர்வு!

நியூசிலாந்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? - டாஸ் வென்ற முதலில் பேட்டிங் தேர்வு!
நியூசிலாந்தை வீழ்த்துமா ஆப்கானிஸ்தான்? - டாஸ் வென்ற முதலில் பேட்டிங் தேர்வு!

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுகின்றன. இந்த ஆட்டத்தில் வெல்லும் அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்கும். ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்றால் ரன் ரேட் வித்தியாசத்தில் இந்தியா அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறவும் வாய்ப்பு உள்ளது. 

இந்நிலையில், அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கான் அணியின் கேப்டன் முகமது நபி, முதலில் தங்கள் அணி பேட் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். 

ஆடும் லெவன் விவரம்... 

நியூசிலாந்து!

மார்ட்டின் கப்டில், டேரில் மிட்செல், கேன் வில்லியம்சன் (கேப்டன்), டெவோன் கான்வே (விக்கெட் கீப்பர்), பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, டிம் சவுத்தி, இஷ் சோதி, டிரெண்ட் போல்ட். 

ஆப்கானிஸ்தான்!

ஹஸ்ரத்துல்லா ஜசாய், முகமது ஷஜாத் (விக்கெட் கீப்பர்), ரஹ்மானுல்லா குர்பாஸ், நஜிபுல்லா ஸத்ரான், குல்பதின் நைப், முகமது நபி (கேப்டன்), கரீம் ஜனத், ரஷித் கான், நவீன்-உல்-ஹக், ஹமீத் ஹசன், முஜீப் உர் ரஹ்மான். 

இந்த போட்டியில் ஆப்கானி அணியின் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் விளையாடுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com